திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு திடீர் தடை
திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை பொதுமக்கள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக வழிபாட்டு தலங்களில் மிகுந்த எச்சரிக்கையோடு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு கொரோனா 3வது அலையை காரணம் காட்டி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஆகஸ்ட் 27 ஆம் தேதி) முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ஆவணி மாத திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணற்றில் நீராட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கோவிலில் பக்தர்களை அனுமதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.