மழை எதிரொலி; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

By Thahir Nov 03, 2022 06:06 AM GMT
Report

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தடை விதிப்பு 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Devotees are prohibited from visiting the Chathuragiri temple

இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்தானது அதிகரித்துள்ளது. ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.