சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

tngovernment sathuragiri
By Petchi Avudaiappan Nov 30, 2021 11:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்குஅதிர்ச்சி அளிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. மலை ஏறி மட்டுமே சென்று சுந்தர மகாலிங்கத்தை வழிபட முடியும்.

வழக்கமாக இந்த கோயிலுக்குச் செல்ல மாதந்தோறும் அமாவாசையை ஒட்டிய 4 நாட்கள் பௌர்ணமியை ஒட்டிய 4 நாட்கள் என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இதற்கிடையே, கொரோனா நோய் ஊரடங்கு காரணமாக, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சதுரகிரி மலை ஏற்றத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சில விதிமுறைகளைப் பின்பற்றி கோயில்களுக்குப் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் மழை பெய்யும் நேரங்களில் பக்தர்களுக்கு திடீர் தடையும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி டிசம்பர் 4ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மலையேற சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.