4 கிலோ நகையுடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்

Tamil nadu India
By Vinoja Mar 14, 2026 11:15 AM GMT
Report

தெலுங்கானா ஹாக்கி சங்க தலைவரான விஜயகுமார் நேற்றைய தினம் காலை திருப்பதி கோவில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் கலந்துக்கொண்டார்.

நகை பிரியரான இவர், உடல் முழுவதும் சுமார் 4 கிலோ தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தார்.

4 கிலோ நகையுடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர் | Devotee Known As Gold Man Arrives At Tirupati

அவரை போலவே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர சோனி குடும்பத்தினர் 4 பேர் குறித்த தரிசனத்தில் கலந்துக்கொண்டனர்.

அவர்களில் ஒவ்வொருவரும் ஏழுமலையான் உருவம் பதித்த தலா 500 கிராம் தங்க நகைகள் வீதம் 4 கிலே தங்கத்தை அணிந்து வந்திருந்தததை பார்த்த சாதாரண பக்கத்கள் வியந்து போயுள்ளனர்.

நேற்றைய தினம் திருப்பதி கோவிலில் 67,264 பேர் தரிசனம் செய்தனர். 29,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் ரூ 4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தசனத்திற்கான வந்த பக்தர்கள் 18 மணிநேர காத்திருப்புக்கு பின்னர் தரிசனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.