நியூசிலாந்து அணி பாவம்...என்ன செய்ய போறாங்களோ? - கவலைப்பட்ட பிரபல வீரர்
காயம் காரணமாக டெவன் கான்வே இறுதி போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து விலகியிருப்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால் இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தநிலையில் நியூசிலாந்து அணியுடனான இறுதி போட்டி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் நியூசிலாந்து அணி குறித்தும் பேசியுள்ளார்.
அதில் அந்த அணியின் டெவன் கான்வே விலகியுள்ளது நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என தெரிவித்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுபவர் கான்வே.
மேலும் என்னை பொறுத்தவரையில் டாஸ் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஷயம் கிடையாது. . டாஸை இழந்துவிட்டால் போட்டியில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அர்த்தம் இல்லை எனவும் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.