மச்சான்.. தமிழில் பேசி அசத்திய நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே - வைரலாகும் Video!
நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெவான் கான்வே
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருப்பவர் டெவான் கான்வே. கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.
மேலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் 2022-ம் ஆண்டு முதல் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் அடித்து அசத்தினார்.
விசில் போடு
இந்நிலையில் பாகிஸ்தான் டி20 தொடரின்போது சிஎஸ்கே ரசிகர் ஒருவர், கான்வேயிடம் ஆட்டோகிராஃப் பெற்றார். அப்போது அவர் "நைஸ் வீடியோ மச்சான்.. விசில் போடு" என்று தமிழில் பேசி அசத்தினார்.
[YOIR7F'
இதனைக் கேட்டவுடன் அந்த ரசிகர் மகிழ்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்த சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Nice video Machan - Devon convey ????
— BB Mama (@SriniMama1) January 16, 2024
Once CSK, Always CSK!#BiggBossTamil7#CSK#ChennaiSuperKings pic.twitter.com/440ISSoNST