‘’என்கிட்ட அந்த டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" - பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் என பிரபல இந்தி சீரியல் நடிகை தேவோலீனா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதில், எனக்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம் தான் டியூஷனுக்குச் சென்றனர்.
திடீரென்று, ஒரு வாரம், என் நண்பர்கள் அந்த ஆசிரியரிடம் டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன்.
அப்போது ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.
நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம் புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன்.
ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள் என கூறி உள்ளார்.