அஸ்வின் விவகாரத்தில் கடுப்பான டிவில்லியர்ஸ் - சரமாரியாக விமர்சனம்
விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முன்னேறி செல்ல வேண்டும் என தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் இந்தியாவின் ஆடும் லெவன் அணியின் தேர்வு முறை கடுமையாக விமர்சனத்திற்குள்ளானது. அஸ்வினுக்கு இடம் கொடுக்காதது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால் இந்திய அணி வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணி தேர்வு முறை குறித்து பேசியுள்ள ஏ.பி.டிவில்லியர்ஸ் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் கோலி தலைமையிலான இந்திய அணி முன்னேறி செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த போட்டி இது. இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.