'வாத்தி கமிங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட டேவிட் வார்னர்

Dance Actor Vijay Devid Warner
By Thahir Aug 02, 2021 05:38 PM GMT
Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல்.

இந்தியா முழுவதும் ஏன் உலகம் வரை சூப்பர் ஹிட் அடித்து எல்லாரையும் ஆடச் செய்தது வாத்தி கமிங். பாடல் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வாத்தி கமிங் பீவர் குறைந்தபாடில்லை.சாதாரண மக்களில் இருந்து முக்கிய பிரபலங்கள் அனைவரும் வாத்தி கமிங் பாடலுக்கு ஆடி விட்டனர்.

தற்போது சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி வைரலாகும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் டேவிட் வார்னர் வாத்தி கமிங் பாடலையும் ஒரு கை பார்த்துள்ளார்.

வாத்தி கமிங் டீவியில் ஒளிபரப்பாக அதைப் பார்த்துக்கொண்டே வார்னர் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.