ஏழு தலித் சமூகங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
தமிழகத்தில் குடும்பன், பண்ணாடி , கடையன் உள்ளிட்ட ஏழு பட்டியல் சமூகங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இந்த ஏழு சமூகங்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த கோரிக்கைக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். இதே கோரிக்கை நிறைவேற்றப்படும் என பாஜக தெரிவித்திருந்தது.
தற்போது இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி கூட கலந்து கொள்ளவில்லை. அனைத்து எம்.பிக்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.