முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

covid india prime minister deve gowda
By Jon Mar 31, 2021 01:43 PM GMT
Report

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,480 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி 354 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,468 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் மனைவி சென்னம்மாவும், நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்.

  முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கு கொரோனா தொற்று உறுதி! | Deve Gowda Corona Infection Confirmed Former Pm

கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவருமே தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.