இலங்கைக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்த படிக்கல்

Sri Lanka Cricket Indian Cricket Team
By Sivaraj Aug 16, 2026 05:54 AM GMT
Report

Devdutt Padikkal maiden test century: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் தேவ்தத் படிக்கல் சதம் அடித்தார்.

காலியில் தொடங்கியுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில், இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார். 

தேவ்தத் படிக்கல்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலியில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. 

Devdutt Padikkal 

அவுஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டும் இளம் வங்காளதேச பந்துவீச்சாளர்

அவுஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டும் இளம் வங்காளதேச பந்துவீச்சாளர்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த அணித்தலைவர் சுப்மன் கில் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரபத் ஜெயசூர்யாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), டெஸ்டில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.     

Devdutt Padikkal

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.