கோலங்களின் நாயகி தேவயானி - புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Devayani Tamil Cinema Chennai Ma. Subramanian
By Thahir 1 வாரம் முன்

கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தேவயானியை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடையில் புகழ்ந்து பேசினார்.

கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக சார்பில் பரிசளிக்கு விழாவில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை தேவயானி கலந்து கொண்டார் . திமுக சார்பில் நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடிகை தேவயானி பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நடிகை தேவயானியை புகழ்ந்த அமைச்சர் 

பின்பு மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோலங்கள் போட்டிக்கு ஏன் அவரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும்.

கோலங்களின் நாயகி தேவயானி - புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Devayani Is The Heroine Of The Kolams

நான் சனிக்கிழமை தான் களைக்காடி எல்லப்பன் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்பிற்கினிய சகோதரி தேவயானி அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கு அவருடைய கரங்களால் பரிசுகளை தந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவித்ததாக கூறினார்.

மேலும் நான் தொலைபேசியில் கேட்டுக் கொண்ட உடன் மறுப்பு ஏதும் சொல்லாமல் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பல சிறப்புகள் உண்டு என்ற அவர் தன் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டு அதே பள்ளியிலேயே பாடம் சொல்லி கொடுக்கிறார் என்றார்.

மேலும் பேசிய அவர், கோலங்கள் சீரியலுக்கு நானும் கூட ரசிகன் தான் என்றார். கடந்த 2003 நவம்பர் 24 ம் தேதி தொடங்கிய சீரியல் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வரைக்கும் ஓடியது.

1533 அத்தியாயம், இதில் பெரும்பாலும் 1000 அத்தியாயங்களையாவது பார்த்து இருக்கிறேன் என்று தெரிவித்தார். குடும்பங்களாக உட்கார்ந்து பார்க்க கூடிய சீரியலாக கோலங்கள் இருந்தது என குறிப்பிட்டார்.