உயிர் வாழ முடியவில்லை ..தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் - அண்ணாமலை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 60- வது ஜெயந்தி குரு பூஜை இன்று கொண்டாடப்பட்டுவருகிறது.
தேவர் ஜெயந்தியினை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த பல் வேறு அரசியல் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை கோரிப்பாளைய்த்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திமுகவின் பொம்மைகள்
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்ணாமலை : முத்துராமலிங்க தேவர் தமிழகத்தின் முக்கியமானகாலக்கட்டத்தில் நல்ல கருத்துக்களை கொண்டு வந்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.
பின்னர் தமிழகத்தின் திமுகவின் ஆட்சி குறித்து பேசிய அண்ணாமலை , தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் திமுக அரசின் பொம்மைகளாக செயல்படு வருவதாக கூறினார் .
தேவர் மீண்டும் பிறந்து வரவேண்டும்
மேலும் தமிழகத்தில் தற்போது உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உருவாகியுள்ளதாக கூறிய அண்ணாமலை , இந்த நிலையானது மாற தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் .
தேவரின் சித்தாந்தம் , கொள்கையினைத்தான் பாஜகவால் மட்டுமே செயல்படுத்த முடியும் அதைத்தான் தமிழக மக்கள் விரும்புவதாக அண்ணாமலை கூறினார்.