சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தேவர் - பிரதமர் மோடி புகழாரம்
மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் தேவருக்கு அஞ்சலி செலுத்தியும், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தேவருக்கு புகழாரம் சூட்டி ட்விட் செய்துள்ளார்.
தேவர் ஜெயந்தியின் சிறப்பு நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன்.
மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டார் என பதிவிட்டுள்ளார்.