மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
CM
Birthday
MK Stalin
Devar
Respect
By Thahir
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
பின்னர், சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செய்யவுள்ளார்.
இதன் பின்பதாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.