தேமுதிக-வை உருவாக்கிய விஜயகாந்த் - கை கொடுக்காத நிர்வாகிகள்..!
தேமுதிக தொடக்கமும் அதன் வளர்ச்சி மற்றும் வளம் வந்த முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தொடக்கம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் செப்டம்பர் 14,2005 அன்று நடிகர் விஜயகாந்த் மதுரையில் தொடங்கப்பட்டது. விஜயகாந்த் இக்கட்சியின் நிறுவன தலைவராகவும், பெதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
கட்சியின் கொடி சிவப்பு-கருப்பு நிறத்தில் நடுவில் மஞ்சள் வட்டதுக்குள்ளே ஒரு தீப சுடர் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் வெற்றி
2006 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது தேமுதிக. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும், கடையநல்லுார்,திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது.
இத்தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேமுதிக சார்பில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்றனர். இந்த தேர்தலில் தேமுதிக 8.4 சதவீதம் வாக்குகளை பெற்றது.
மக்களிடம் வரவேற்பை பெற்ற தேமுதிக
விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்தது. 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இன்றி தனித்து நின்றது.
40 தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியுற்றாலும் 10 சதவீத வாக்குகளை பெற்றது தேமுதிக. 10 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளின் வெற்றி,தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் தேமுதிக உற்று நோக்கப்பட்டது. 40 தொகுதிகளிலும் 30 லட்சத்து 73 ஆயிரத்து 479 வாக்குகளை பெற்றது.
தேமுதிகவில் பண்ருட்டி ராமச்சந்திரன்
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் தேமுதிகவிற்கு படையெடுக்க ஆரம்பித்தனர் சில அரசியல் ஆளுமைகள். அந்த வகையில் பண்ருட்டி இராமச்சந்திரன் தேமுதிகவில் இணைந்தார்.
இவர் ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும்,பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்,பட்டாளி மக்கள் கட்சியிலும் இருந்தார்.
ஐந்து முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும், மு. கருணாநிதி , எம்.ஜி.ஆர் அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் அங்கம் வகித்துள்ளார்.
இவர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எதிர்க்கட்சியாக அமர்ந்த தேமுதிக தமிழக அரசியல் களத்தில் முக்கியமான ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து விலகியது.
கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்
16-வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட அனைத்து தேமுதிக உறுப்பினர்களும் தோல்வியை தழுவினர்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியது.
அந்த சமயத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள் 7 பேர் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர் விலகிய 7 பேரும் ஆளும் கட்சியான அதிமுக அரசுக்கு ஆதரவளித்தது.இதனால் சட்டமன்த்தில் அக்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிவை நோக்கி சென்றது.
2013 ஆண்டு ஒரு இடத்திற்கு நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுகவை எதிர்த்து தேமுதிக போட்டியிட்டு தோல்வியடைந்தது.
இந்நிலையில் அதே ஆண்டில் கட்சியின் முக்கிய நிர்வாகியான பண்ருட்டி ராமசந்திரன் உட்பட பலர் தேமுதிகவில் இருந்து விலகினர்.
தேமுதிகவிற்கு குறைந்த மவுசு
2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிகவிற்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
14 தொகுதிகளில் களம் இறங்கிய தேமுதிக வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அதோடு அதன் வாக்கு சதவீதம் 6.1 அளவுக்கு குறைந்தது.
மக்கள் நல கூட்டணியில் தேமுதிக
மக்கள் நலக்கூட்டணியில் இணைந்த தேமுதிக 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதை தொடர்ந்து திருச்செந்துார், பென்னாகரம்,வந்தவாசி, திருமங்கலம் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் தோல்வியை தழுவியது.இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது.
எழுச்சி பெறுமா தேமுதிக?
கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெளியேற தொடங்கிய நிலையில் தமிழகத்தின் தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக கட்சி பற்றிய உங்கள் கருத்துகளை கீழே காமெண்ட் ஆக பதிவு செய்யுங்கள்