தமிழ் மொழியை கற்க ஆசை :நிறைவேறாத மோடியின் ஆசை
தமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறவில்லை என பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றுவது வழக்கம் .
இன்று 74 ஆவது முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதில் பேசிய அவர், மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த 4 மாதங்களுக்கு நீரை சேமிக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் என கூறினார். தொடர்ந்து தமிழ் மிகவும் தொன்மையானது, அதன் கலாச்சாரங்கள் புகழ் பெற்றது என்று கூறிய பிரதமர் மோடி, தமிழை கற்க வேண்டும் என்பது என் ஆசை.
ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என உருக்கமாக பேசினார். மேலும், தமிழ் இலக்கியங்கள் உன்னதமானது என்றும் தமிழ் தொன்மையான மொழி என்றும் அவர் தெரிவித்தார்.