'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' படத்தின் இயக்குனருக்கு திருமணம்...பெண் யாரென்று தெரியுமா?

tamil love director flim
By Jon Jan 26, 2021 08:33 PM GMT
Report

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகின. துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்ய உள்ளாராம்.

இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இந்த திருமணம் காதல் திருமணம் இல்லை என்றும் முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Gallery