பறிப்போன பதக்கம் - தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத்தின் மாமா உருக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்து, அவரது மாமா மகாவீர் போகத் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
தகுதிநீக்கம்
பிரான்சில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார் . இன்று இரவு தங்கப் பதக்கத்திற்கான இறுதி போட்டி விளையாட இருந்தது . ஆனால் அவர் தற்பொழுது தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகியுள்ளது.
வேதனையடைய வேண்டாம்..
இந்த நிலையில்,பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறித்து, அவரது மாமா மகாவீர் போகத் கண்ணீர் மல்க பேசியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வினேஷிடம் இருந்து தங்கத்தை நாடே எதிர்பார்த்தது. போட்டியில் விதிகள் உள்ளன .
ஆனால் ஒரு மல்யுத்த வீரர் 50-100 கிராம் அதிக எடையுடன் இருந்தால் வழக்கமாக அனுமதிப்பார்கள். வேதனையடைய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு நாள் அவர் நிச்சயம் ஒரு பதக்கத்தைக் கொண்டு வருவாள். அடுத்த ஒலிம்பிக்கிற்கு அவரை தயார் செய்வேன் என்று அவரது மாமா மகாவீர் போகத் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.