இந்தியாவில் 100 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து? - வெளியான அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் இந்தியாவில் பல மருத்துவ கல்லூரிகள் ரத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ கல்லூரிகள்
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணம் தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதவிர தமிழ் நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 100-க்கும் அதிக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
வல்லுநர்கள் தகவல்
இதனை தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் கூறுவது, "தேசிய மருத்துவ கவுன்சில் ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை சார்ந்து இருக்கிறது.

ஆனால் மருத்துவர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்படாத சூழலே நிலவுகிறது. அவர்கள் இரவு நேரம் மற்றும் அவசர காலங்களிலும் பணியாற்ற வேண்டும். இதனால் தேசிய மருத்துவ கவுன்சில், பணி நேரத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி வருகிறது.
மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை, இதனால் தேசிய மருத்துவ கவுன்சில் இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,' என்று தெரிவித்தார்.
மேலும், "'மருத்துவ கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தாலேயே தேசிய மருத்துவ கவுன்சில் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து வருகிறது" என்று கூறியுள்ளார்.