மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை அழகுப்படுத்தப்படும் - துணை மேயர் மகேஷ்குமார்
மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை விரைவில் அழகுப்படுத்தப்பட உள்ளது என தமிழக துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பெசன்ட் நகரில் உள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு, மறு சுழற்சி பயன்பாடு, குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார் கலந்து கொண்டார்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை
அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,
தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் கூடுதலாக 3000 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் தொடர்பான புகார்கள் மாநகராட்சிக்கு வந்துக் கொண்டிருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில், ப்ராஜெக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை அழகுபடுத்தப்பட இருக்கிறோம் என்றார்.