மழை நீரில் தத்தளிக்கும் சென்னை ..பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - உதயநிதி விளக்கம்!

Udhayanidhi Stalin Tamil nadu Chennai Cyclone
By Vidhya Senthil Nov 30, 2024 12:37 PM GMT
Report

சென்னை ரிப்பன் மாளிகையில் மழை கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ஃபெஞ்​சல் புயல்

வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. இது மாலை 6 மணியளவில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

மழை நீரில் தத்தளிக்கும் சென்னை

ஃபெஞ்​சல்’ புயல் நாளை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் , தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

வெளுத்து வாங்கும் ஃபெஞ்சல் புயல்..பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

வெளுத்து வாங்கும் ஃபெஞ்சல் புயல்..பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

மேலும் சென்னை மழை பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள் தொடர்பாக ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

உதயநிதி ஆய்வு

சென்னையில் 12 இடங்களில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. மீதமுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. மழை நீரை அகற்ற 1700 மோட்டார் பம்புகள் இயக்கப்பட்டு வருகிறது.

மழை நீரில் தத்தளிக்கும் சென்னை

இன்று மதியம் ஒரு மணி முதல் மழையின் காரணமாக விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நடந்துவருகிறது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் .

மேலும் சென்னையில் அம்மா உணவகத்தில் இன்று இலவச உணவு வழங்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள், படகுகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.