எங்கேயும் மழைநீர் தேங்கவில்லை..அதுவே வெள்ளை அறிக்கைதான் - துணை முதல்வர் பதிலடி!

Udhayanidhi Stalin Chennai Edappadi K. Palaniswami Cyclone
By Swetha Oct 16, 2024 10:30 AM GMT
Report

மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

துணை முதல்வர் 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. நேற்று இரவு முதல் தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

எங்கேயும் மழைநீர் தேங்கவில்லை..அதுவே வெள்ளை அறிக்கைதான் - துணை முதல்வர் பதிலடி! | Deputy Cm Udayanidhi Stalin Response To Eps

சென்னை திருவல்லிகேணி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சட்டமன்ற தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிகேணி அலுவலகத்தில் போர்வை, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.1000 உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தேவையின்றி வெளியே வர வேண்டாம்.. மின்சாரம் சீராக உள்ளது- துணை முதல்வர் அறிவுரை!

தேவையின்றி வெளியே வர வேண்டாம்.. மின்சாரம் சீராக உள்ளது- துணை முதல்வர் அறிவுரை!

பதிலடி

அவருடன் தயாநிதி மாறன் எம்.பி உடனிருந்தார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்து பருவ மழையை எதிர்கொண்டோம்.

எங்கேயும் மழைநீர் தேங்கவில்லை..அதுவே வெள்ளை அறிக்கைதான் - துணை முதல்வர் பதிலடி! | Deputy Cm Udayanidhi Stalin Response To Eps

தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.