கள்ள ஓட்டு போட துணை முதல்வரின் ஆதரவாளர்கள் முயற்சியா?
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கள்ள ஓட்டு போட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளன. தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள அண்ணா நடுநிலை பள்ளியில் 9 பூத்கள் உள்ளன. இதில் 84வது பூத்தில் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது. இந்த தகவல் கிடைத்ததும் திமுக முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், அந்த பூத்திற்கு விசாரிக்க வந்தார்.
அப்போது பூத்திற்குள் ஓபிஎஸ் படத்துடன் கூடிய மஞ்சள் பைகளுடன் பலர் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்து லட்சுமணன் அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர்களை அந்த பூத்தில் இருந்து வெளியேறுமாறு திமுகவினர் வாதமிட்டனர். ஆனால் அவர்களோ அங்கிருந்து செல்ல மறுத்து வாக்குவாதம் செய்தனர்.
இதுபற்றி புகார் அளித்த லட்சுமணன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூத் முழுக்க இருக்கின்றனர். கள்ள ஓட்டு போடுவதற்கான முயற்சி நடக்கிறது. அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது’’ என்றார்.