ரொம்ப நேர்மையா இருந்தேன் என்னைய அசிங்கப்படுத்திட்டாங்க : வேதனையில் உத்தப்பா
என்னுடைய முழு விசுவாசமும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் இருந்தது என்று சென்னை அணியின் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் அனுபவ வீரர் ராபின் உத்தப்பாவை சென்னை அணி டிரேடிங் மூலம் தனது அணியில் இணைத்துக் கொண்டது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்தும் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த ராபின் உத்தப்பா பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசுகையில்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக என்னுடைய முதல் தொடரை விளையாடும் போது தனிப்பட்ட ரீதியாகவே நான் மிகப் பெரும் மன உளைச்சலை எதிர்கொண்டேன்.
அந்த தொடரில் நான் ஒரு ஒழுங்காக விளையாடவில்லை, ஒரேவொரு போட்டியில் மட்டுமே விளையாடினேன், அதுவும் அந்த போட்டிக்கு முன் ஒரு போட்டி என்னை நீக்கிவிட்டு பின் மீண்டும் விளையாடவைத்தார்கள். அதற்கு முந்தைய தொடரில் நான் மும்பை அணிக்காக விளையாடினேன் பின்பு தான் பெங்களுர் அணிக்கு டிரேட் மூலம் மாறினேன்.
முதலில் டெட் மூலம் டிரேட் மூலம் அணி மாறுவதை நான் விரும்பவில்லை, பலரும் கொடுத்த நெருக்கடிக்கு பின்புதான் அதை ஏற்றுக்கொண்டேன் . ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜாகிர்கான்,மனிஷ் பாண்டே போன்ற வீரர்களோடு மிகவும் நெருக்கமாக பழகினேன்
இதனால் அணி மாறுவதை விரும்பவில்லை,ஆனால் அதை தவிர வேறு வழியில்லை.
பிறகு பல யோசனைக்கு பிறகு டிரேட் மூலம் பெங்களூர் அணிக்காக மாறினேன் ஆனால் அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னுடைய முழு விஸ்வாசமும் மும்பை அணிக்குதான் இருந்தது, என்று ராபின் உத்தப்பா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.