இன்று மாலை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பொழியலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இன்று மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.