இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி

United States of America India
By Thahir Oct 07, 2022 06:33 AM GMT
Report

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு 

அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி சந்தித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி | Depreciation Of Indian Rupee

டாலாருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.82.33 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முந்தைய அமர்வில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81.88 ஆக இருந்தது.

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.