6 வருடம் ஆச்சு - தாயான தீபிகா - தள்ளிப்போக ரன்வீர் தான் காரணமா..?
பாலிவுட் பிரபல நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் விரைவில் பெற்றோர்கள் ஆகவுள்ளனர்.
தீபிகா - ரன்வீர்
அடுத்தடுத்த பிளாக் பாஸ்டர் படங்களில் நடித்து வரும் பாலிவுட்டின் டாப் ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்.
கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். அண்மையில் தீபிகா நடிப்பில் வெளியான பதான், ஃபைடர் போன்ற படங்கள் பாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
சில காலமாகவே இந்த ஜோடி விரைவில் பெற்றோர்களாக உள்ளனர் என்ற தகவல் வெளியான நிலையில், அது குறித்து அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
6 ஆண்டுகள்
வரும் செப்டம்பர் மாதத்தில் தங்களது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஜோடிக்கு பாலிவுட்டீன் நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்.
முன்னதாக, திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து தற்போது பெற்றோர்கள் ஆகவதற்கும், சினிமாவில் கவனம் செலுத்த இவர்கள் முடிவெடுத்தது தான் காரணம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.