இனி... ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது - போக்குவரத்து துறை எச்சரிக்கை

Tamil nadu
By Nandhini Aug 03, 2022 07:08 AM GMT
Report

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து அரசு ஊழியர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளில், அரசுப் பணியாளர் எவரும் வேலை நிறுத்தத்திலோ அல்லது அதனைத் தூண்டும் நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது.

அரசுப் பணியாளர் எவரும், அரசு அலுவலகத்தில் அல்லது அலுவலக வளாகத்தின் எந்தப்பகுதியிலும் அலுவலக நேரத்தின்போதும் மற்றும் விடுமுறை நாட்களிலும் ஊர்வலம் செல்வதோ, கூட்டம் நடத்துவதோ கூடாது என்பது விதிகளில் உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் போது பொதுமக்கள் பயணம் செய்வதற்கு பெரிதும் அவதிக்குள்ளாகுவார்கள்.

strike

வேலை நிறுத்தப் போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் நேற்று அறிவித்தது. 

போராட்டத்தில் ஈடுபடக்கூடாது

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வார விடுமுறை, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். மேலும், பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.