தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு : காரணம் என்ன?

By Irumporai 2 மாதங்கள் முன்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் ஊரவலத்திற்கு அனுமதி

தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டி.ஜி.பி-யிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது .

ஆனால், மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிடும்படி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு : காரணம் என்ன? | Denial Of Permission To Rss Procession

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ​​இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

சில இடங்களில் தடை

   இந்த நிலையில் தமிழகத்தில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.சட்டம் ,ஒழுங்கு பிரச்னை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.