தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 16,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 15ம் தேதி 133 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 17ம் தேதி நேற்று மட்டும் 244 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 1320 பேர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அளவில் சென்னை டெங்கு பாதிப்பில் முதலிடம் வகிப்பதாகவும், 87 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
