கேரளாவில் பரவி வரும் டெங்கு, எலி காய்ச்சல் - ஒரே நாளில் 8 பேர் பலி!

Cold Fever Kerala Death
By Vinothini Jul 02, 2023 12:38 PM GMT
Report

கேரளா மாநிலத்தில் மிக தீவிரமாக பரவி வரும் எலி காய்ச்சலால் 8 பேர் பலியாகியுள்ளனர்.

காய்ச்சல்

கேரள மாநிலத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பலவித காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் மலப்புரம் மாவட்டத்தில் 2,007 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

dengu-rat-fever-spreading-in-kerala

அதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தில் 1,488 பேரும், திருவனந்தபுரத்தில் 1,182 பேரும், பாலக்காட்டில் 1,042 பேரும், எர்ணாகுளத்தில் 1,030 பேரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழப்பு

இந்நிலையில், திருச்சூரில் எலி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும், இந்த காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். தற்போது கேரளாவில் டெங்கு காய்ச்சலும், எலி காய்ச்சலும் தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

dengu-rat-fever-spreading-in-kerala

தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத்துறை புள்ளி விபரங்களின் படி மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு வகை காய்ச்சல் பாதிப்புகளுக்கு 12 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை தீவிரபடுத்து வருகின்றனர்.