தமிழகத்தில் தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல், 6 பேருக்கு உறுதி - பீதியில் மக்கள்!
திடீரென தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
காய்ச்சல்
தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில், சில நாட்களாக பெரும்பாலான மக்கள் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் சில நாடுகளாக அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்பொழுது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது, இந்த சூழலில் கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
டெங்கு பாதிப்பு
இந்நிலையில், அப்பகுதியில் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், நெய்வேலி, முட்டத்தை சேர்ந்த 2 ஆண்கள், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்கள் என மொத்தம் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெங்கு உறுதி செய்யப்பட்ட 6 பெரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் அதிகரித்து வரும் எண்ணிக்கை மக்களை அச்சத்திற்குள்ளாகியது. இதை தவிர்க்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.