ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை - காவல்துறை அதிரடி உத்தரவு
திருச்சி மாநகரில் இன்று முதல் 15 நாட்களுக்கு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிப்பு
கோவையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் பாஜக அலுவலகம், ஜவுளி கடை மற்றும் பாஜக நிர்வாகிகளின் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தால் கோயம்புத்துார் மாவட்டம் பரபரப்புக்குள்ளானது.
இந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை சம்பவத்தை அடுத்து திருச்சி மாநகரில் பொது அமைதியை காக்கும் வகையில் இன்று முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரையிலும் 15 நாட்களுக்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.