மேற்கு வங்க தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடியுங்கள்: வலுக்கும் கோரிக்கை

Election BJP Modi West Bengal Mamata Baneerjee
By mohanelango Apr 16, 2021 06:36 AM GMT
Report

இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மேற்கு வங்கத்தில் மேலும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சார கூட்டங்களும் பேரணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கின்ற நிலையில் தேர்தல் பிரச்சாரங்களால் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீதமுள்ள நான்கு கட்ட மேற்கு வங்க தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.இதே கோரிக்கையை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் எழுப்பியுள்ளார். 

ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் வாக்குகள் தற்போதே எண்ணப்பட்டு முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது.