உருமாற்றமடைந்த கொரோனா டெல்டா ப்ளஸ்..ஆபத்தை ஏற்படுத்துமா?

india corona delta
By Irumporai Jun 14, 2021 06:59 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா பரவல் திடீரென வேகமாக அதிகரித்ததற்கு உருமாறிய கொரோனா வைரஸ்தான் காரணமாக கூறப்படுகிறது.

இந்த உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்டா கொரோனா உருமாறி டெல்டா பிளஸ் வைரசாக உருமாறியுள்ளதாக ஆராய்ச்சியளர்கள் கூறியுள்ளனர்.

இந்த டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இந்த டெல்டா பிளஸ்ஸின் தீவிரமாக இருக்கும் எனவும் இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகளை முறியடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த டெல்டா பிளஸ் கொரோனாவினை கட்டுப்படுத்த Casirivimab, Imdevimab ஆகிய இரண்டு மருந்துகளின் கலப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.