டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

PTR Delta Plus Corona
By Thahir Jun 27, 2021 08:39 AM GMT
Report

டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது - பெங்களூருவில் உள்ள பிரத்தியோக ஆய்வக கருவிகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளபடும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! | Deltaplus Corona

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை வணிகவரித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் திறந்து வைத்தனர். அவர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தபோது கொரோனா பரவல் மிகுந்து இருந்தது அதனை வகைப்படுத்தியும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் சரி செய்து மீண்டும் மூன்றாம் நிலையில் அதன் பற்றாக்குறை நிரந்தரமாக ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜனை உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது இரண்டு செயல்பட்டு வந்துள்ளது மேலும் இரண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை மே 26 ஆம் தேதி 1166 பேருக்கு கொரோனா தற்போது 70 பேர் என தொற்று என குறைந்துள்ளது.டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது. இதற்காக பிரத்தியோகமாக பெங்களூருவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினால் மட்டுமே வைரஸை கண்டறிய முடியும்.

தொடர்ந்து பெங்களூரில் உள்ள பிரத்தியேக ஆய்வுக் கருவியை தமிழகத்திற்கு கூடுதலாக பெற முதல்வர் தலைமையில் முயற்சிகள் எடுக்கப்படும்.தனியார் மருத்துவமனையில் கட்டண வசூல் குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை கண்டறிந்து தீர்வு காண முடியும், தனி நபர்கள் அளித்த புகாரின்படி விசாரித்து அவர்களுக்கு மீண்டும் பணத்தை பெற்றுக் கொடுத்தோம் என கூறினார்