யாரும் கை வைக்க முடியாது நானும் டெல்டாக்காரன்தான் : கவன ஈர்ப்பு தீர்மானதில் முதலமைச்சர் ஸ்டாலின்
நானும் டெல்டாக்காரன்தான் என்று நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்கம்
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

மேலும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். ,நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்.
நானும் டெல்டாக்காரன் தான்
பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகலை மத்திய அமைச்சருக்கு வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினேன். எனது கடிதத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிய அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளார்.
நானும் டெல்டாக்காரன், நிச்சயம் உறுதியாக இருப்பேன்; மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என தெரிவித்துள்ளார்.