அமெரிக்காவில் 80% டெல்டா வைரஸ் தான் இருக்கு : ஆண்டனி பவுசி அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசஸ் இருப்பதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் .

அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி தெரிவித்துள்ள மருத்துவ குறிப்பில்:

   டெல்டா கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவதை டெல்டா வைரஸ் அதிகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பதிவாகும் கொரோனாதொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டெல்டா வைரஸ் வந்தாலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இருப்பதில்ல்லை ஆகவேதடுப்பூசி பயனுள்ளதாக இருப்பதாக உள்ளது.

ஆகவே தடுப்பூசி செலுத்திக்கொள்வதே உயிரை காக்கும் என அவர் தெரிவித்துள்ளார்

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்