டெல்டா வகை கொரோனா அதிகளவில் பரவக்கூடியது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இதுவரை காணப்பட்ட வகைகளிலேயே டெல்டா வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா 2வது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், புதிதாக டெல்டா பிளஸ் வகை கொரோனா பொதுமக்களிடையே பரவ தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் இதுவரை 9 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உலகில் 85க்கும் மேலான நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் டெல்டா வகை மாறுபாடு இதுவரை அடையாளம் காணப்பட்ட வகைகளிலேயே "மிகவும் அதிகம் பரவக்கூடியது" என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
மேலும் இந்த வகை வைரஸ் மாறுபாடு தடுப்பூசி செலுத்தப்படாத மக்களிடையே வேகமாக பரவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.