எச்சரிக்கை மக்களே ..அம்மை போல் டெல்டா வேகமா பரவும் : தடுக்க வழி என்ன?

Delta corona transmissible chickenpox US report
By Irumporai Jul 31, 2021 11:58 AM GMT
Report

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் வந்தவாறே உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், டெல்டா வகை கொரோனா வைரஸ் மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை,பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும்; எளிதாக பரவும் என கூறியுள்ளது.

எச்சரிக்கை மக்களே ..அம்மை போல் டெல்டா வேகமா பரவும் : தடுக்க வழி என்ன? | Delta Transmissible As Chickenpox Us Report

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கூறும் அந்த அறிக்கையில் தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது.

ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன ஆகவே அனைவரும் கண்டிப்பாக எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என சி.டி.சி தெரிவித்துள்ளது.