மிரட்டும் டெல்டா கொரோனா.. கர்நாடகாவில் இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ்!
கர்நாடகாவில் இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் உருமாறிய கொரோனா டெல்டா பிளஸ்நாட்டில் 4 மாநிலங்களில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா ஏற்பட்டுள்ளது.
தற்போது கர்நாடகாவில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 22 பேருக்கு இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
தற்போது மைசூரில் ஒருவருக்கும் பெங்களூருவில் ஒருவருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது