தமிழகத்தில் டெல்டா , ஓமைக்ரான் இணைந்து 3-வது அலையாக பரவுகிறது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

tamilnadu 3rdwave ministermasubramanian
By Irumporai Jan 02, 2022 05:52 AM GMT
Report

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது,  தமிழகம் முழுவதும் 86.22% பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் 58.82% பொதுமக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது.2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ளலாம். முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.

வரும் 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது. சென்னையிலேயே பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் முறையாக தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

முகக்கவசம், தடுப்பூசி போடுவது தான் இந்த பேரிடரில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி. ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது. தமிழகத்தில் விரைவில்பள்ளி, கல்லூரி வளாகங்களில் சிறார்களுக்கு தடுப்பூசி மையங்கள் அமைகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவர்களில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.