டெல்டா மாவட்ட அமைச்சர் திமுக வேட்பாளரிடம் தோல்வி
நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தோல்வியை சந்தித்துள்ளளார்.
அமைச்சர் எம்.சி சம்பத்தை எதிர்த்து திமுக சார்பில் அய்யப்பன் என்பவர் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இந்த வாக்குஎண்ணிக்கையில் காலை முதலே இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். இந்த நிலையில் மாலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.
அதில், அமைச்சர் எம்.சி சம்பத் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. திமுக வேட்பாளர் அய்யப்பன் 84,000-க்கும் அதிகமான வாக்குகளும், அமைச்சர் எம்சி. சம்பத் 79,000-த்திற்கு அதிகமான வாக்குகளும் பெற்றனர்.