‘‘மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்’’: ஆவேசமான விஜயகாந்த்

vijayakanth meghadadudam deltafarmer
By Irumporai Jun 19, 2021 10:42 AM GMT
Report

காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அறிவிப்பிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களை  சந்தித்த  கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அளித்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என தெரிவித்தார்.

கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்,

இந்த நிலையில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

‘‘மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்’’: ஆவேசமான விஜயகாந்த் | Delta Farmer Megha Dadu Dam Is Built Vijayakandh

எனவே, மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடகா அரசு உடனடியாக கைவிட வேண்டும்.  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீ மன்றத்த தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். என தெரிவித்துள்ளார்.