டெல்டா கொரோனாவை சமாளிக்க நம்ம கிட்ட இருக்கும் ஒரே ஆயுதம் இதுதான்.. அட்வைஸ் கொடுக்கும் உலக சுகாதார அமைப்பு!

who corona
By Irumporai Jun 27, 2021 10:08 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த  டெல்டா வகை கொரோனா உருமாற்றம் அடைந்து  85 நாடுகளில் பரவி உள்ளது.

இந்த நிலையில் டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் ஆதநோம் இது குறித்து முக்கிய செய்தியினை வெளியிட்டுள்ளார்.

அதில், டெல்டா வகை கொரோனா 85 நாடுகளில் பரவி இருக்கிறது,இந்த வைரஸ் ஏற்கனவே பரவிய கொரோனா வைரஸ்களை விட  டெல்டா  கொரோனா அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

இது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களிடம் வைரஸ் வேகமாக பரவுகிறது. அதே போல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளிலும் சமூக கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது என கூறினார்.

மேலும் டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரே தீர்வு  தடுப்பூசி போட்டு கொள்வதுதான் என கூறினார். அதே போல்  இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்த தாமதம் செய்வதும் கூட வைரசின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என டெட்ராஸ் ஆதநோம் கூறியுள்ளார்.