பிரிட்டனில் டெல்டா கொரோனா : பாதுகாப்பை தீவிரப்படுத்தும் சுகாதாரத்துறை
முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட மாற்றமடைந்த டெல்டா வகை கொரோனா பிரிட்டனில் வேகமாக பரவி வருவதாக பிரிட்டன் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 கொரோனா வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டது.
இந்த டெல்டா வகை கொரோனா பல நாடுகளிலும் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த டெல்டா வகை கொரோனா பிரிட்டனில் அதிக வீரியத்துடன் பரவி வருவதாக பிரிட்டன் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிதாக 12,431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதில், 5,472 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது பரவி வரும் டெல்டா வகை கொரோனா பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்தி வருவதாக பிரிட்டன் சுகாதராத்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.