VIDEO: டெல்டா விமானத்தில் திடீர் தீ - 300 பேரின் நிலை என்ன?

United States of America Fire Florida Flight
By Sumathi Apr 22, 2025 06:31 AM GMT
Report

டெல்டா விமானம் திடீரென தீப்பிடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பற்றிய தீ

அமெரிக்கா, ஃப்ளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது.

Delta flight

தொடர்ந்து அட்லாண்டாவுக்கு செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 282 பயணிகள், 10 சிப்பந்திகள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர்.

உன்னை திருமணம் செய்யவில்லையென்றால்.. பாதிரியாராக செல்வேன் - போப் காதல் கடிதம்

உன்னை திருமணம் செய்யவில்லையென்றால்.. பாதிரியாராக செல்வேன் - போப் காதல் கடிதம்

300 பேர் நிலை?

இந்நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது. உடனே, மீட்பு படையினர், பயணிகளையும், சிப்பந்திகளையும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.