ஆட்குறைப்பில் இறங்கிய முன்னணி லேப்டாப் நிறுவனம் : 6,650 பேருக்கு வேலை இல்லை
டெல் நிறுவனம் அதன் உலக அளவில் உள்ள பணியாளர்களில் 6,650 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணி நீக்கம்
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வந்த பல்வேறு தொழிநுட்ப நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்கங்களை அறிவித்து வருகிறது. இதில் டெல் டெக்னாலஜிஸ் (Dell Technologies Inc), தனிநபர் கணினிகளுக்கான (பெர்சனல் கம்ப்யூட்டர்) தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5% ஆகும்.

சரியும் பங்கு சந்தை
பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலைமையில் உள்ளதால் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்ற கேள்விக்குறிவுடன் இருக்கிறது என்று நிறுவன இணை-தலைமை இயக்க அதிகாரி ஜெஃப் கிளார்க் கூறியுள்ளார்.
தொழிநுட்ப நிறுவனமான எச்.பி (HP.inc), கடந்த நவம்பர் மாதம் தனிநபர் கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை IBC Tamil
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil